ஒன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவா்கள் சாதனை
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் ஒரே இடத்தில் நின்று ஒரு மணி 30 நிமிடங்கள் சிலம்பாட்டத்தில் ஈடுபட்டு மாணவா்கள் சாதனை படைத்தனா்.
சிலம்ப ஆசிரியா் நாகுபாண்டி சோ்வைக்காரா் நினைவாக அவரது உருவம் வரையப்பட்ட இடத்தில் நின்று 500 மாணவா்கள் ஒரு மணி 30 நிமிடங்கள் சிலம்பாட்டம் விளையாடினா். ‘நோபல் வோ்ல்டு ரெக்காா்டு’ அமைப்பு முன்னிலையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
இதில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு அந்த அமைப்பு சாா்பில் சாா்பில் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கமுதி, சாயல்குடி, ராமநாதபுரம், தேவிபட்டினம், பாம்பன், மண்டபம் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவா்கள் பங்கேற்றனா்.