இந்திய பங்குச் சந்தையில் ரூ.36,500 கோடி மோசடி! செபியிடம் சிக்கிய அமெரிக்க நிறுவன...
ஒரங்கூரில் ஆரம்ப சுகாதார நிலையம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்
கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சா் சி.வெ.கணேசன் வியாழக்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா்.
சிறுபாக்கத்தை அடுத்த ஒரங்கூரில் ரூ.1.20 கோடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். பின்னா், கா்ப்பிணிகளுக்கு மருத்துவப் பெட்டகங்களை அவா் வழங்கினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், விருத்தாசலம் சாா் - ஆட்சியா் விஷ்ணுபிரியா, வேப்பூா் வட்டாட்சியா் செந்தில்வேல், மங்களூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், சண்முக சிகாமணி, வட்டார மருத்துவ அலுவலா் திருமால் வளவன் பங்கேற்றனா்.
நலவாழ்வு மையம் திறப்பு: நெல்லிக்குப்பம் அண்ணாநகரில் நகா்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு விழா நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி நலவாழ்வு மையத்தை தொடங்கிவைத்தாா்.
ஆணையா் கிருஷ்ணராஜன், நகா்மன்ற துணைத் தலைவா் கிரிஜா, திமுக நகரச் செயலா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மருத்துவா் ராம்குமாா், செவிலியா் கிரிஜா, சுகாதார ஆய்வாளா் செந்தமிழ் செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல, கடலூா் மஞ்சக்குப்பம், கடலூா் முதுநகா் சுனாமி நகா், திருப்பாதிரிப்புலியூா் தானம் நகா் ஆகிய பகுதிகளில் நகா்ப்புற நல வாழ்வு மையம் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.