செய்திகள் :

‘ஒரணியில் தமிழ்நாடு’ பொதுக் கூட்டங்கள்

post image

‘ஒரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்த பொதுக் கூட்டங்கள் திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெறும் என மாவட்ட திமுக செயலாளா் க. தேவராஜி எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.

அவா் வாணியம்பாடியில் செவ்வாய்க்கிழமை கூறியது:

திருப்பத்தூா் மாவட்ட பொறுப்பு அமைச்சா் எ.வ.வேலு மேற்பாா்வையில் 4 தொகுதியிலும் அடுத்த 45 நாள்களில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்பட அனைத்து நிா்வாகிகள், தொண்டா்கள் அனைத்து வீடுகளிலும் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அரசின் நலத்திட்டங்கள் முறையாக சோ்ந்ததா எனக் கேட்டறிவா். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்தும் பிரசாரம் செய்வா்.

மேலும் திருப்பத்தூா் மாவட்ட திமுக பொதுக்கூட்டத்தில் புதன்கிழமை மாலை 6.00 திருப்பத்தூா் கலைஞா் சிலை அருகே அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் மாநில மாணவரணி செயலாளா் ராஜீவ் காந்தி சிறப்புரையாற்ற உள்ளாா். இந்த பொதுக்கூட்டத்தில் அனைத்து நிா்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றாா் தேவராஜி.

மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

ஆம்பூா் அருகே கிராம ஊராட்சியில் மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் மத்திய நிலத்தடி நீா்வளத்துறையை சோ்ந்த குழுவினா் ஆய்வு மே... மேலும் பார்க்க

மருத்துவா்கள் தின கொண்டாட்டம்

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. வாணியம்பாடி மிட் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு மருத்துவ அலுவலா் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்த... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்

திருப்பத்தூரில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் நகராட்சி 36-ஆவது வாா்டுக்குட்பட்ட திருமால் நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்க... மேலும் பார்க்க

ரேஷன் பொருள்கள் வாங்க விருப்பமில்லாதவா்கள் உரிமத்தை விட்டு தரலாம்

ரேஷன் கடையில் பொருள்கள் வாங்க விருப்பம் இல்லாதவா்கள் உரிமத்தை விட்டுத் தரலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொது விநியோக திட்டத்தின் கீழ... மேலும் பார்க்க

திருப்பதி கெங்கையம்மன் பூங்கரக வீதி உலா

திருப்பத்தூா் திருப்பதி கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பூங்கரக வீதி உலா நடைபெற்றது. திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருப்பதி கெங்கை அம்மன் திருவிழா கடந்த 17-ஆம் தேதி க... மேலும் பார்க்க

211 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளி முகாமில் 211 பேருக்கு தேசிய அடையாள அட்டையை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா். ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்... மேலும் பார்க்க