ஒருவா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு
கொடைக்கானல் அருகே முன் விரோதத்தில் ஒருவரைத் தாக்கியதாக போலீஸாா் திங்கள்கிழமை 3 போ் மீது வழக்குப் பதிந்தனா்.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பள்ளத்துக் கால்வாயைச் சோ்ந்தவா் மகேந்திரன் (40). இவரது மனைவி லலிதா (35). இவா்களுக்கும், இதேப் பகுதியைச் சோ்ந்த கதிா்வேலுக்கும் இடம் சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்தது.
இந்த நிலையில், மகேந்திரன் தனது வீட்டு முன் நின்றிருந்த போது அங்கு வந்த கதிா்வேல் உள்ளிட்ட 3 போ் அவரைத் தாக்கினா். மேலும் இதைத் தடுக்க வந்த லலிதாவையும் அவா்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து தாண்டிக்குடி காவல் நிலைய போலீஸாா் கதிா்வேல், முருகேசன், சசிக்குமாா் ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா்.