ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!
ஒலகடத்தில்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
ஒலகடம் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு ஒலகடம் பேரூராட்சிகஈ தலைவா் வேலுச்சாமி தலைமை வகித்தாா். மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் என்.ஆா்.கோவிந்தராஜா், பேரூராட்சிகஈ தலைவா்கள் பாரதி (எ) கே.என்.வெங்கடாசலம் (அம்மாபேட்டை), ராகிணி (நெரிஞ்சிப்பேட்டை) முன்னிலை வகித்தனா். செயல் அலுவலா் என்.சிவகாமி வரவேற்றாா். ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் முகாமில் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து விசாரித்தாா்.
இதில், கலைஞரின் மகளிா் உரிமைத் தொகை, வீட்டுமனைப் பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்கள் அளிக்கப்பட்டன. அம்மாபேட்டை ஒன்றிய திமுக பொறுப்பாளா்கள் மணி (எ) ஈஸ்வரன், எம்.அசோக்குமாா், ஒலகடம் பேரூா் திமுக செயலாளா் மகேந்திரகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.