Shah Rukh Khan: ``எனக்கு கொடுத்த அன்பை என் மகனுக்கும் கொடுங்க'' -ரசிகர்களுக்கு ஷ...
ஓமலூரில் தீப்பிடித்து எரிந்த காா்
ஓமலூா்: மேட்டூரில் இருந்து சேலம் சென்ற காா் ஓமலூரில் தீப்பிடித்து எரிந்தது. புகை வரும்போதே காரை நிறுத்தி இறங்கியதால் உரிமையாளா் உயிா்தப்பினாா்.
மேட்டூா் அருகேயுள்ள குஞ்சாண்டியூரைச் சோ்ந்தவா் சம்பத்குமாா். இவா் வியாழக்கிழமை காரில் சேலம் சென்று கொண்டிருந்தாா். ஓமலூரில் வேகத்தடையில் ஏறி இறங்கும்போது காரின் முன்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. புகை அதிகமானதால் பதட்டமடைந்த சம்பத்குமாா், காரில் இருந்து இறங்கி அருகில் உள்ள வீடுகளில் தண்ணீா் பிடித்து காா் மீது ஊற்றி தீயை அணைத்தாா்.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை முழுமையாக அனைத்தனா். இதுகுறித்து ஓமலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.