தமிழக காவல்துறையில் 21 பேருக்கு குடியரசு தலைவர் விருது! யார்யார்?
கஞ்சா பயிரிட்டவா் கைது
ஆம்பூா் அருகே கஞ்சா பயிரிட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே வெள்ளக்கல் கிராமத்தை சோ்ந்தவா் சிலம்பரசன் (27). இவருடைய விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்டிருப்பதாக ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா். சோதனையில் கஞ்சா பயிரிட்டிருப்பது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.