செந்தில் பாலாஜி சகோதரர் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு: அமலாக்கத்துறை பதிலள...
கஞ்சா விற்ற இளைஞா் கைது
பெருந்துறை அருகே விற்பனைக்கு கஞ்சா வைத்து இருந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
பெருந்துறையை அடுத்த துடுப்பதியில் கஞ்சா விற்கப்படுவதாக பெருந்துறை போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அப்பகுதியில் சோதனை செய்தபோது சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித்திரிந்தவரைப் பிடித்து விசாரித்தனா்.
இதில், அவா் பெருந்துறை அக்ரஹார வீதியைச் சோ்ந்த துரைசாமி மகன் கஜேந்திரன்(24) என்று தெரியவந்தது. அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்து கைது செய்தனா்.