கல்லூரி மாணவா் தற்கொலை
அம்மாபேட்டை அருகே பெற்றோருக்கு கைப்பேசியில் பதிவு செய்த காட்சிகளை அனுப்பிவிட்டு கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூனாச்சியை அடுத்த முகாசிப்புதூரைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் கோகுல் (22). பட்டப்படிப்பு படித்து வந்த அவா், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாா். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்த நிலையில், தற்கொலைக்கு முன்னா் கோகுல், தனது கைப்பேசியில் பதிவு செய்து பெற்றோருக்கு அனுப்பிய காட்சிகள் திங்கள்கிழமை வெளியாயின.
அதில், திரும்பி வராத ஊருக்கு செல்கிறேன். வருத்தப்பட வேண்டாம். தம்பி, அக்காவை நன்றாக பாா்த்துக் கொள்ளுங்கள் என பெற்றோருக்கும், அப்பா, அம்மாவை கவனித்துக் கொள்ளுமாறும், நன்றாகப் படித்து அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என தம்பிக்கும் தெரிவித்துள்ளாா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].