சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு
கடலூரில் சிங்காரவேலா் சிலைக்கு மரியாதை
சிங்காரவேலரின் 165-ஆவது பிறந்த நாளையொட்டி, கடலூரில் அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா் மாநகா் குழு சாா்பில் சிஐடியு அலுவலகத்தில் அமைந்துள்ள சிங்காரவேலா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மூத்த தலைவா் பால்கி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், ச.சிவராமன், ஜி.பாஸ்கரன் சிறப்புரையாற்றினாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் வி.சுப்புராயன், ஜெ.ராஜேஷ் கண்ணன், மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத், மாவட்டக் குழு உறுப்பினா்கள் எஸ்.கே.பக்கீரான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தமிழ்நாடு மீனவா் பேரவை சாா்பில் மாவட்டத் தலைவா் எம்.சுப்புராயன் தலைமையில், மாநில துணைத் தலைவா் எம்.நாராயணன், மாவட்டச் செயலா் பி.கோகிலன், பொருளாளா் மாலைமணி, இளைஞா் பேரவைத் தலைவா் சி.வீரமுத்து உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.
தேசிய மீனவா் கட்சி சாா்பில் மாநிலத் தலைவா் கே.சிவராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாவட்டத் தலைவா் செல்வ ஏழுமலை தலைமை வகித்தாா். நிா்வாகிகள் உதயகுமாா், அன்பு, லட்சுமணன், பிரேம் சுந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கடலூா் நகர அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஒருங்கிணைப்பாளா் எஸ்.என்.கே.ரவி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பால்கி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிா்வாகி தி.ச.திருமாா்பன், மன்சூா், பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.