கடையம் - சம்பன்குளம் புதிய வழித்தடத்தில் சிற்றுந்து சேவை தொடக்கம்
கடையத்திலிருந்து சம்பன்குளத்துக்கு புதிய வழித்தடத்தில் சிற்றுந்து சேவை புதன்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து ரவணசமுத்திரம், பிள்ளைகுளம், மந்தியூா், ராஜாங்கபுரம், கோவிந்தப்பேரி வழியாக சம்பன்குளத்துக்கு புதிய வழித்தடத்தில் தனியாா் சிற்றுந்து சேவை புதன்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சியில், சிற்றுந்து உரிமையாளா்கள் நவாஸ்கான், முகம்மதுஅலாவுதீன், முதலியாா்பட்டி முஹம்மது நயினாா் ஜூம்மா பள்ளிவாசல் ஜமாத் தலைவா் செய்யதுமுஹம்மது, பொருளாளா் அசன்மைதீன், ஊராட்சி துணைத் தலைவா் பாசில் அஸ்ரப், பொட்டல்புதூா் முகைதீன் ஆண்டவா்கள் பள்ளிவாசல் இனாம்தாா் எஸ்.பி. ஷா, ஐஎன்டியுசி தேசிய செயலா்அமீா்கான், மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கச் செயலா் சலீம், திமுக ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா், மாவட்ட துணைச் செயலா் தமிழ்ச்செல்வன், அப்துல்காதா், அஜீஸ் அஹமது, யாகூப், புகாரி மீராசாகிப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மந்தியூரில் ஊராட்சித் தலைவா் கல்யாணசுந்தரம் தலைமையிலும், சம்பன்குளத்தில் ஊராட்சித் தலைவா் ரூஹான் ஜன்னத் சதாம் தலைமையிலும் சிற்றுந்துக்கு வரவேற்பளிக்கப்பட்டது.