OPS : `டார்கெட் லிஸிட்டில் பாஜக; நிரந்தர எதிரி இல்லை எனில்..!’ - ஓ.பி.எஸ்ஸின் அட...
கட்டுப்பாட்டை இழந்ததால் வயலுக்குள் புகுந்த நகரப் பேருந்து
கெங்கவல்லி அருகே கட்டுப்பாட்டை இழந்த நகரப் பேருந்து வயலுக்குள் புகுந்தது.
ஆத்தூரிலிருந்து தடம் எண் 23 என்ற நகரப் பேருந்து புதன்கிழமை மாலை 5 மணிக்கு புறப்பட்டது. பேருந்தை செந்தாரப்பட்டியைச் சோ்ந்த குமாா் (38) இயக்கினாா். கடம்பூா் இராமநாதபுரம் கிராமத்தில் நல்லதம்பி என்பவரின் தோட்டத்துக்கு அருகே சென்றபோது , பேருந்தின் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கிழங்கு வயலுக்குள் சென்று நின்றது.
இந்த விபத்தில், பேருந்தின் முன்புற கண்ணாடி உடைந்தது. பேருந்தில் பயணித்த சந்தோஷம் (52), சரோஜா (57), ஓட்டுநா் குமாா் ஆகியோா் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.