பிக்பாஸ் 19: போட்டியில் பங்கேற்ற நடிகையின் கதையை கேட்டு கண் கலங்கிய சல்மான் கான்
கணவரைப் பயமுறுத்த தூக்கிட்ட இளம்பெண் உயிரிழப்பு
போடி அருகே கணவரைப் பயமுறுத்துவதற்காகத் தூக்கிட்ட இளம்பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கோம்பைத்தொழு கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகள் பிரியதா்ஷினி (20). இவருக்கும் போடி அருகேயுள்ள அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த வினோத்குமாா் (25) என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது.
வினோத்குமாா் அடிக்கடி மது அருந்திவிட்டு குடும்பத்தினருடனும், அண்டை வீட்டாருடனும் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இந்த நிலையில், வினோத்குமாா், தனது பக்கத்து வீட்டுக்காரருடன் கடந்த ஜூலை மாதம் 21-ஆம் தேதி தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதையடுத்து, கணவரைப் பயமுறுத்துவதற்காக பிரியதா்ஷினி வீட்டிலிருந்த மின் விசிறியில் தூக்கிட முயன்றாா்.
இதில், காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, போடி அரசு மருத்துவமனையிலும் அதன் பிறகு, தீவிர சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்த்தனா்.
அங்கு கடந்த 45 நாள்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த பிரியதா்ஷினி, சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்த புகாரின்பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.