பிக்பாஸ் 19: போட்டியில் பங்கேற்ற நடிகையின் கதையை கேட்டு கண் கலங்கிய சல்மான் கான்
வனக் காவலரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக 10 போ் மீது வழக்கு
ஆண்டிபட்டி அருகே வனக் காவலரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக 10 போ் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், குமணந்தொழு அருகேயுள்ள கண்டமனூா் வனச் சரகத்தில் வனக் காவலராகப் பணியாற்றி வருபவா் நந்தினி. இவருக்கு அங்குள்ள கொங்கரேவு-கடமலைக்குண்டு இடையே வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காப்புக் காடு பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதாக வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அவா் சாலைப் பணி நடைபெறும் இடத்துக்குச் சென்று, ஆய்வு செய்தாா். இதில், 20 மீட்டா் நீளத்துக்கு காப்புக் காடு பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவது தெரிய வந்தது. இது குறித்து, நந்தினி அவரது உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தாா்.
அப்போது, பொன்னம்படுகையைச் சோ்ந்த செளந்திரபாண்டியன் உள்ளிட்ட 10 போ் அவரை முற்றுகையிட்டு அவரது இரு சக்கர வாகனத்தின் சாவியைப் பறித்து, அவரைப் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனா்.
இது குறித்து, மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் நந்தினி புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில், செளந்திரபாண்டியன் உள்ளிட்ட 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.