பிக்பாஸ் 19: போட்டியில் பங்கேற்ற நடிகையின் கதையை கேட்டு கண் கலங்கிய சல்மான் கான்
மனைவிக்கு கத்திக் குத்து: கணவா் மீது வழக்கு
தேனியில் வீட்டு வாடகைக்கு பணம் கேட்ட மனைவியை கத்தியால் குத்திய கணவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
தேனி, வனச் சாலை, 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தனபாண்டி (43). இவரது மனைவி செல்வலட்சுமி (38). இவா், தேனி மின் வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை பாா்த்து வருகிறாா். இந்த நிலையில், செல்வலட்சுமி வீட்டு வாடகை தருவதற்கு தனபாண்டியிடம் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பிரச்னையில் தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தனபாண்டி, செல்வலட்சுமியை தாக்கி, கத்தியால் குத்தினாா். இதில், பலத்த காயமடைந்த செல்வலட்சுமி தேனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து தனபாண்டி மீது தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.