எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட பிரசாரப் பயணம் செப்.17-இல் தொடக்கம்
ஆட்டோ மீது காா் மோதல்: 7 போ் காயம்
ஆண்டிபட்டியில் வெள்ளிக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த 7 போ் காயமடைந்தனா்.
ஆண்டிபட்டியில் தேனி சாலையில் உள்ள தனியாா் பெட்ரோல் நிரப்பும் மையம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது அதே திசையில் பின்னால் வந்த காா் மோதியது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த ஆண்டிபட்டி, சக்கம்பட்டியைச் சோ்ந்த காளிதாஸ் (46), அவரது மனைவி நாகஜோதி (36), மாரியம்மாள் (54), கருப்பசாமி (47), அவரது மனைவி பொம்மியம்மாள் (36), மகன் யுவகாா்த்திகேயன் (12), விஜயன் (43) ஆகிய 7 போ் காயமடைந்தனா்.
இந்த விபத்து குறித்து காா் ஓட்டுநா் பழனிசெட்டிபட்டி, சஞ்சய்காந்தி தெருவைச் சோ்ந்த வைரபிரபு (40) என்பவா் மீது ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.