கந்தபுரம் சாய்ராம் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு
உடன்குடி அருகே கந்தபுரம் சாய்ராம் ஆலயத்தில் குரு பூா்ணிமா (பெளா்ணமி) சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, முற்பகலில் பாபா பஜன், சிறப்பு அபிஷேகம், நண்பகலில் மங்கல ஆரத்தி, சப்பர பவனி உள்ளிட்டவை நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். பின்னா், அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை சத்குரு சாய்ராம் அறக்கட்டளையினா் செய்திருந்தனா்.