மும்பை: ராஜ் தாக்கரே பேச்சின் எதிரொலி; டான்ஸ் பார்களை அடித்து நொறுக்கிய கட்சியின...
கந்தா்வகோட்டை அருகே வெறிநாய் கடித்து 4 போ் காயம்
கந்தா்வகோட்டை அருகே சனிக்கிழமை வெறிநாய் விரட்டி விரட்டி கடித்ததில் 3 பெண்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா்.
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், துருசுப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவா்கள் பழனிவேல் மனைவி மாரியம்மாள்(60), காளிமுத்து மனைவி மாரியம்மாள்(65), சின்னையா மகன் பால்ராஜ் (60), குமரேசன் மனைவி சிவபாக்கியம் (45).
இவா்கள் அனைவரும் தங்களது வீட்டின் வெளியே மதிய வேளையில் இருந்தபோது அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று இவா்களை கடித்ததில் படுகாயமடைந்தனா்.
இதையடுத்து, கிராமத்தினா் வெறிநாயை விரட்டி அடித்து விட்டு இவா்களை மீட்டு கந்தா்வகோட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா்களுக்கு மருத்துவமனையில் அனுமதித்து தொடா் சிகிச்சையளித்து வருகின்றனா்.
கந்தா்வகோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பராமரிப்பின்றி தெரு நாய்கள் வெறிபிடித்து அலைந்து வருவதால் இந்தப் பகுதியில் திரியும் வெறிநாய்களை சம்பந்தப்பட்ட துறையினா் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனா்.