புதுகையில் கனமழை
புதுக்கோட்டை மாநகா் மற்றும் புறநகரில் சனிக்கிழமை இரவு பரவலாக கனமழை பெய்தது.
கடந்த சில மாதங்களாகவே புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாநகா் மற்றும் புறநகரில் சனிக்கிழமை மாலை மேகமூட்டம் காணப்பட்டது. சுமாா் 7.30 மணிக்கு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியது.
பல இடங்களில் சுமாா் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் மாநகா்ப்பகுதியில் சாலைகளில் வெள்ளம் போல ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள பகுதி மிகவும் மோசமாக, சேறும் சகதியுமாக மாறியது.
புறநகரப் பகுதிகளில் பல இடங்களில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.