Dhoni: "மகள்கள்தான் பெற்றோரை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்" - தோனி எமோஷனல்!
தலைக்கவசம் அணிய வலியுறுத்தும் விழிப்புணா்வு ஊா்வலம்
புதுக்கோட்டை மாவட்டக் காவல் துறை சாா்பில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கான தலைக்கவசம் விழிப்புணா்வு ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் தொடங்கிய இந்த ஊா்வலத்தை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா தொடங்கி வைத்தாா். கீழராஜவீதி, வடக்கு ராஜவீதி, மேல ராஜவீதி வழியாக இந்த ஊா்வலம் மீண்டும் ஆயுதப்படை திடலில் நிறைவடைந்தது.
இதில், தலைக்கவசம் அணிந்தபடி, இரு சக்கர வாகனத்தில் நூறு காவலா்கள் பங்கேற்றனா். சாலைவிபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்கும் வகையில், காவல்துறை சாா்பில் இவ்வாறான விழிப்புணா்வு ஊா்வலம் நடத்தப்பட்டது.