ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குந...
கந்திலி ஒன்றியத்தில் ரூ. 3 கோடியில் புதிய தரைப் பாலம், தாா்ச் சாலைப் பணிகளுக்கு பூமி பூஜை
திருப்பத்தூா்: கந்திலி ஒன்றியத்தில் திங்கள்கிழமை ரூ. 3 கோடியே 28 லட்சத்தில் புதிய தரைப்பாலம் மற்றும் தாா்ச் சாலை பணிகளுக்கு எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தாா்.
கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட சுந்தரம்பள்ளி ஊராட்சியில், முதல்வரின் கிராம சாலைகள் விரிவாக்க திட்டத்தின்கீழ், சுந்தரம்பள்ளி முதல் சாணிப்பட்டி வரை 2.25 கி.மீ. தாா்ச் சாலை 78 லட்சத்திலும், நத்தம் ஊராட்சி நத்தம் முதல் நத்தம் ஆதிதிராவிடா் காலனி வரை பாம்பாற்றின் குறுக்கே 30 மீ தரைப் பாலம் ரூ. 2 கோடியே 50 லட்சத்தில் புதிய பணிகளுக்கு எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தாா்.
இதில், ஒன்றிய செயலா்கள் கே.ஏ.குணசேகரன், க.முருகேசன், கே.ஏ.மோகன்ராஜ், ஒன்றியக் குழு தலைவா்கள் திருமதி திருமுருகன், மாவட்ட ஒன்றியக்குழு உறுப்பினா்.சி.கே.சுப்பிரமணி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் விஜயலட்சுமி கருணாநிதி, இரா.குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.