கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு; குவிந்த அதிமுக தொண்டர்க...
கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
கன்னியாகுமரி கடலில் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்ட பின்னா் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலையை இணைக்கும் கண்ணாடிப் பாலம் ஆகியவற்றை 2 லட்சத்து 20 ஆயிரத்து 200 சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பாா்வையிட்டுள்ளனா். இதில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் போ் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு பயணம் செய்துள்ளனா். இந்த தகவலை பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.