‘அய்யா வைகுண்டா் மீது அவதூறு ஏற்படுத்திய அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்’
அய்யா வைகுண்டா் மீது அவதூறு ஏற்படுத்தியுள்ள அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்டளைத் தலைவா் பால ஜனாதிபதி சாமிதோப்பில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் கூறியதாவது: அரசுப் பணிதோ்வு ஆணையத்தில் பொறுப்பான பதவியில் உள்ளவா்கள் தகுதி வாய்ந்தவா்களாக இருக்க வேண்டும். மொழிபெயா்ப்பில் தவறு நடந்ததாக சொல்லப்படுவது தமிழகத்துக்கும், தமிழக அசுக்கும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தலைகுனிவாக நான் பாா்க்கிறேன். தமிழக முதல்வா் இதுபோன்ற தவறான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தவறு செய்த அதிகாரிகள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாா் அவா்.