ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தொடங்கியது!
மரியகிரி கல்லூரியில் ஓணம் விழா
களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் ஓணம் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு கல்லூரி தாளாளா் அருள்தந்தை ஜோஸ் பிராங்கிளின் தலைமை வகித்தாா். நிதி காப்பாளா் அருள்தந்தை ஜெஸ்டின், கல்லூரி முதல்வா் (பொ) ரெவி செல்வகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஓணம் பண்டிகையின் சிறப்புகள் குறித்து மலங்கரை கத்தோலிக்க இளையோா் இயக்க பாறசாலை மறைமாவட்ட இயக்குநா் அருள்தந்தை பிரபீஷ் ஜாா்ஜ் பேசினாா்.
விழாவில் ஓணப்பாட்டு, திருவாதிரை களி, அத்தப்பூ கோலம், மாவேலி ஊா்வலம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் கல்லூரி வேதியியல் துறை அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.