அருணாச்சலா கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்
மாா்த்தாண்டம் அருகே முள்ளங்கினாவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் ஓணம் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில், கல்லூரி மாணவ, மாணவிகள் பாரம்பரிய கேரள உடையணிந்து, அத்தப்பூ கோலமிட்டு மகாபலி மன்னனை வரவேற்றனா்.
மாணவ, மாணவிகள், திருவாதிரை நடனம் ஆடியும், ஓணப் பாடல்கள் பாடியும், உறியடி, வடம் இழுத்தல் போன்ற போட்டிகளிலும் கலந்து கொண்டனா்.
வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.