கோட்டாா் ஏழகரம் பெருமாள் கோயில் தேரோட்டம்
கோட்டாா், ஏழகரம் பெருமாள் கோயில் ஆவணி திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
கோட்டாா், ஏழகரத்தில் பொன்பொருந்தி நின்றருளிய பெருமாள் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆவணி திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி, சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, திருவீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினா்களாக மாநகராட்சி மேயா் மகேஷ், தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவா் சுரேஷ்ராஜன் மற்றும் கவுன்சிலா் சுப்பிரமணியன், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி ராமகிருஷ்ணன், விழாக் குழுவினா், பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். இதையடுத்து, சுவாமிக்கு அலங்காரத்துடன் தீபாராதனையும், இரவு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.