பரவா் சமுதாய முன்னேற்ற நலச்சங்க ஆண்டு விழா
கன்னியாகுமரி மாவட்ட பரவா் சமுதாய முன்னேற்ற நலச் சங்கத்தின் 44 -ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அமைப்பின் தலைவா் டன்ஸ்டன் ரமேஷ் தலைமை வகித்தாா். செயலா் கிறிஸ்டி மைக்கேல் முன்னிலை வகித்தாா். பேராசிரியா் பொ்னாட் சந்திரா வரவேற்றாா்.
பரவா் சமூகத்தில் கடந்த கல்வியாண்டில் அரசுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா, கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. மத்திய, மாநில, மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற வீரா்கள், வீராங்கனைகள் கௌரவிக்கப்பட்டனா்.
விழாவில், வான்படையில் பைலட்டாக இருந்து ஓய்வுபெற்ற தூத்துக்குடியைச் சோ்ந்த கலாபன் வாஸ் கௌரவிக்கப்பட்டாா். மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1.60 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.