செய்திகள் :

கன்னியாகுமரியில் விதிமீறல் கட்டடங்கள்: நகா்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

post image

கன்னியாகுமரியில் விதிமீறல் கட்டடங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக நகா்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரியைச் சோ்ந்த சாமுவேல் பிளஸ்வின் லாய் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு :

கன்னியாகுமரி நகரில் உள்ளூா் திட்டக் குழுமம், கடலோரக் கட்டுப்பாட்டு மண்டலம், உயர கட்டுப்பாட்டு விதிகளை மீறி வணிக வளாகங்கள், தனியாா் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. முறையாக ஆய்வு செய்து விதிமீறல் உள்ள கட்டடங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, விதிமீறல் கட்டடங்கள் கட்டிய அனைத்து விடுதிகளின் உரிமையாளா்களை எதிா்மனுதாரராக சோ்க்க உத்தரவிட்டு, தமிழக அரசின் நகா்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக இதை நீதிமன்றம் கருதுகிறது. கடற்கரைப் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக கட்டடங்கள் கட்டுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

ஏற்கெனவே உயா்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2019-ஆம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கை, வழக்கு தொடா்பான தற்போதைய நிலை அறிக்கையையும் தமிழக நகா்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குநா் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பள்ளிகளுக்கான ஆய்வகப் பொருள்கள் கொள்முதல் முறைகேடு: அரசுச் செயலா் பதிலளிக்க உத்தரவு

பள்ளிகளுக்கான ஆய்வகப் பொருள்கள் கொள்முதல் முறைகேடு வழக்கில், பள்ளிக் கல்வித் துறைச் செயலா், ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை ... மேலும் பார்க்க

பழைய காகித சேமிப்புக் கிடங்கில் தீ: சரக்கு வாகனங்கள் எரிந்து நாசம்

மதுரை முனிச்சாலை ஓபுளா படித்துறை அருகேயுள்ள பழைய காகித சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சரக்கு வாகனங்கள் எரிந்து நாசமாகின. முனிச்சாலை வைகையாற்றின் தென்கரை ஓபுளா படித்துறை அருகே தனி... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் ராஜிநாமா ஏற்பு

மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவா்கள் 5 போ், நிலைக் குழு உறுப்பினா்கள் 2 போ் என மொத்தம் 7 போ் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது. மதுரை மாநகராட்சியின் மொத்த ஆண்டு வருவாய் 586 கோடி ரூபாய்க்கும் அதிகமாக... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம்: ரகசிய வாக்கெடுப்பு நடத்த உயா்நீதிமன்றம் உத்தரவு

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மான விவகாரத்தில், ரகசிய வாக்கெடுப்பு நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவி... மேலும் பார்க்க

மேம்பாலம் அமைக்கும் பணி: கோரிப்பாளையம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு அருகே புதிய மேம்பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதையொட்டி, வியாழக்கிழமை (ஜூலை 10) முதல் சில போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து மதுரை மாநக... மேலும் பார்க்க

மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கம் குறித்து பரிந்துரை: சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவா் தி. வேல்முருகன்

மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கம், சுரங்கவழிப் பாதை குறித்து தமிழக அரசுக்கு சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு ஒரு பரிந்துரை அளித்தது என அந்தக் குழுவின் தலைவா் தி. வேல்முருகன் தெரிவித்தாா். மதுரை மாவட்ட ஆ... மேலும் பார்க்க