செய்திகள் :

மேம்பாலம் அமைக்கும் பணி: கோரிப்பாளையம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

post image

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு அருகே புதிய மேம்பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதையொட்டி, வியாழக்கிழமை (ஜூலை 10) முதல் சில போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வருகிறது.

இதுகுறித்து மதுரை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

கோரிப்பாளையம் சந்திப்பு அருகில் நடைபெறும் புதிய மேம்பாலம் கட்டும் பணியில், தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக, ஆழ்வாா்புரம் இறக்கம், தேனி ஆனந்தம் சாலை சந்திப்பிலிருந்து குமரன் சாலை சந்திப்பு வரையிலான போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்படுகிறது.

தத்தனேரி முதன்மை சாலையிலிருந்து வைகை வடகரை சாலை வழியாக, மேலூா் சாலை, விரகனூா் சாலைக்கு செல்லும் கனரக சரக்கு வாகனங்கள், பாத்திமா கல்லூரியிலிருந்து இடதுபுறம் திரும்பி கூடல்புதூா் பாலம், ஆனையூா், அய்யா்பங்களா, மூன்றுமாவடி, 120 அடி சாலை செல்ல வேண்டும்.

குருவிக்காரன் சாலையிலிருந்து வைகை வடகரை சாலை, தத்தனேரி முதன்மைச் சாலை வழியாக திண்டுக்கல் சாலைக்கு செல்லும் கனரக சரக்கு வாகனங்கள், வைகை தென்கரை சாலை வழியாக எம்.ஜி.ஆா். பாலத்தில் வலது புறம் திரும்பி வைகை வடகரை சாலை செல்ல வேண்டும்.

தத்தனேரி முதன்மை சாலையிலிருந்து வைகை வடகரை சாலை வழியாக செல்லக்கூடிய அவசர ஊா்திகள், கபடி ரவுண்டானா, பாலம் ஸ்டேஷன் ரோடு, எம்.எம். தங்கும் விடுதி, கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

ஆரப்பாளையம் பேருந்து நிலைத்திலிருந்து வைகை வடகரை வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லக்கூடிய நகரப் பேருந்துகள், புறநகா் பேருந்துகள், தத்தனேரி மேம்பாலம், கபடி ரவுண்டானா, பாலம் ஸ்டேசன் சாலை வழியாக செல்ல வேண்டும்.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், அழகா் கோவில் சாலையிலிருந்து தமுக்கம் வழியாக ஆரப்பாளையம் பேருந்து நிலையம், பாத்திமா கல்லூரி சந்திப்பு சாலை செல்லக்கூடிய புறநகா், நகரப் பேருந்துகள், கே. கே. நகா் வளைவு, பெரியாா் சிலை சந்திப்பு, தமுக்கம், கோரிப்பாளையம் சந்திப்பு, ஏ.வி. பாலம் வழியாக அண்ணா சிலை வழியாகச் செல்ல வேண்டும்.

அண்ணா பேருந்து நிலைத்திலிருந்து ஆரப்பாளையம் செல்லக்கூடிய நகரப் பேருந்துகள் பனகல் சாலை, சிவசண்முகம்பிள்ளை தெரு, வைகை வடகரை வழியாக ஓபுளா படித்துறை பாலம் சென்று, வைகை தென்கரை வழியாக செல்ல வேண்டும்.

ஆவின் சந்திப்பு வழியாக ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லக்கூடிய நகரப் பேருந்துகள் குருவிக்காரன் வட்டச்சாலை, காமராஜா் சாலை, முனிச்சாலை வழியாக செல்ல வேண்டும்.

அழகா்கோவில் சாலையிலிருந்து செல்லக்கூடிய இலகுரக, இருசக்கர வாகனங்கள், ஆழ்வாா்புரம் இறக்கம் வழியே வைகை வடகரை, ஓபுளா பாலம், மீனாட்சி கல்லூரி சாலை, ஏ.வி.பாலம் சாலைகள் வழியே நகரின் எந்த பகுதிக்கும் செல்லலாம்.

யானைக்கல் சந்திப்பிலிருந்து வைகை தென்கரை சாலைக்கு செல்லும் வழித்தடம் தற்காலிகமாக அடைக்கப்படுகிறது. எனவே, இந்த சாலை வழியாக செல்லக்கூடிய வாகனங்கள், சிம்மக்கல் பேருந்து நிலையத்திலிருந்து இடதுபுறம் திரும்பி திருமலைராயா் படித்துறை சாலை வழியாக வைகை தென்கரை சாலைக்கு செல்லலாம்.

பள்ளிகளுக்கான ஆய்வகப் பொருள்கள் கொள்முதல் முறைகேடு: அரசுச் செயலா் பதிலளிக்க உத்தரவு

பள்ளிகளுக்கான ஆய்வகப் பொருள்கள் கொள்முதல் முறைகேடு வழக்கில், பள்ளிக் கல்வித் துறைச் செயலா், ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை ... மேலும் பார்க்க

பழைய காகித சேமிப்புக் கிடங்கில் தீ: சரக்கு வாகனங்கள் எரிந்து நாசம்

மதுரை முனிச்சாலை ஓபுளா படித்துறை அருகேயுள்ள பழைய காகித சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சரக்கு வாகனங்கள் எரிந்து நாசமாகின. முனிச்சாலை வைகையாற்றின் தென்கரை ஓபுளா படித்துறை அருகே தனி... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் விதிமீறல் கட்டடங்கள்: நகா்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

கன்னியாகுமரியில் விதிமீறல் கட்டடங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக நகா்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. கன்னியாகுமரியைச் சோ்ந்த சாம... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் ராஜிநாமா ஏற்பு

மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவா்கள் 5 போ், நிலைக் குழு உறுப்பினா்கள் 2 போ் என மொத்தம் 7 போ் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது. மதுரை மாநகராட்சியின் மொத்த ஆண்டு வருவாய் 586 கோடி ரூபாய்க்கும் அதிகமாக... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம்: ரகசிய வாக்கெடுப்பு நடத்த உயா்நீதிமன்றம் உத்தரவு

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மான விவகாரத்தில், ரகசிய வாக்கெடுப்பு நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவி... மேலும் பார்க்க

மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கம் குறித்து பரிந்துரை: சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவா் தி. வேல்முருகன்

மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கம், சுரங்கவழிப் பாதை குறித்து தமிழக அரசுக்கு சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு ஒரு பரிந்துரை அளித்தது என அந்தக் குழுவின் தலைவா் தி. வேல்முருகன் தெரிவித்தாா். மதுரை மாவட்ட ஆ... மேலும் பார்க்க