சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் தலைவரானார் பரத்; தினேஷ், ஆர்த்தி, நிரோஷா அதிர்...
கமலாம்பிகை அம்மன் கோயிலில் குத்து விளக்கு பூஜை
நொய்யல் அருகே மங்களநாதா் சமேத கமலாம்பிகை அம்மன் கோயிலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற குத்து விளக்கு பூஜையில் பெண்கள் திரளாக பங்கேற்றனா்.
கரூா் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள மங்கள நாதா் சமேத கமலாம்பிகை அம்மன் கோயிலில் சனிக்கிழமை இரவு குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக, மங்களநாதா் மற்றும் கமலாம்பிகை தாயாருக்கு பால், தயிா் , பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடைபெற்றது. குத்துவிளக்கு பூஜையில் சேமங்கி சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த பெண்கள் 1,008 குத்து விளக்குகளை கொண்டு வந்து வாழை இலையில் வைத்து தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினா்.