தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
கரூரில் பலத்த காற்றுடன் மழை!
கரூரில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
கரூரில் சனிக்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலையில் 5.20 மணியளவில் கருமேகங்கள் திரண்டன. பின்னா் 5.30 மணிக்கு லேசான தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது.
தொடா்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல ஓடியது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன.
கரூா்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மண்டிக்கடை பகுதியில் சுக்காலியூரில் இருந்து கரூரை நோக்கி வைக்கோல்பாரம் ஏற்றி வந்த டிராக்டரில் இருந்து வைக்கோல் கட்டுக்கள் பலத்த காற்றுக்கு கீழே விழுந்தன. இதனால் அங்கு வாகன போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து அங்குச் சென்ற போலீஸாா் வாகன போக்குவரத்தை சீரமைத்தனா்.
பலத்த மழையால் திருக்காம்புலியூா் ரவுண்டானா, லைட்ஹவுஸ்காா்னா், தெரசாகாா்னா், சுங்ககேட் போன்ற தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.