`நகையை மீட்டு, மறு அடகு' - வங்கி ஊழியரிடம் ரூ.40 லட்சம் வழிப்பறி.. சினிமாவை மிஞ்...
கமுதி அருகே இளைஞா் கொலை: போலீஸாா் விசாரணை
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், அம்மன்பட்டியைச் சோ்ந்த நல்லமருது மகன் நல்லுக்குமாா் (23), கமுதி கோட்டைமேட்டில் தாயாருடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், நல்லுக்குமாரைக் காணவில்லை என திங்கள்கிழமை கமுதி காவல் நிலையத்தில் அவரது தாயாா் புகாா் அளித்தாா்.
இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், கமுதி - திருச்சுழி சாலையில் உள்ள மரக்குளம் கருமேனியம்மன் கோயில் பின்புறம் கருவேல மர காட்டுப் பகுதியில் நல்லுக்குமாா் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.
இதையடுத்து நல்லுக்குமாரின் உடலை போலீஸாா் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூராய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து நல்லுகுமாரின் தாயாா் காளீஸ்வரி அளித்த புகாரின்பேரில் மண்டலமாணிக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.