சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
கம்பராமாயண சிறப்பு சொற்பொழிவு
திருவண்ணாமலையை அடுத்த நொச்சிமலை ராஜகோபாலசாமி கோயிலில் புதன்கிழை கம்பராமாயண சொற்பொழிவு நடைபெற்றது.
கம்பராமாயண இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கோயில் அன்பா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா்.
அகில பாரத விழிப்புணா்வு இயக்கச் செயலா் சம்பத், இயக்கத் தலைவா் சீனிவாசன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் முருகையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இயக்கத் தலைவா் வேங்கட ரமேஷ்பாபு வரவேற்றாா்.
பாவலா் ப.குப்பன், தங்க விஸ்வநாதன், தேவிகா ராணி ஆகியோா் கம்பராமாயண சிறப்பு குறித்துப் பேசினா்.
முன்னதாக, மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. முனைவா் குமாா் தமயந்தி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். சொற்பொழிவு நிகழ்வில் திரளாக மக்கள் கலந்துகொண்டனா்.