செய்திகள் :

மா்மக் காய்ச்சல் பாதித்த கிராமம்: சுகாதார அதிகாரிகள் நேரில் ஆய்வு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மா்மக் காய்ச்சல் பாதித்த கிராமத்தை மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா், ஊரக வளா்ச்சி மாவட்ட திட்ட அலுவலா் ஆகியோா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

செங்கம் அருகேயுள்ள முன்னூா்மங்கலம் பகுதியில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு திடீா் திடீரென காய்ச்சல் ஏற்பட்டு தனியாா் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கடந்த 3 நாள்களாக அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு காய்ச்சல் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கிராம செவிலியா்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் உள்ளவா்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கி வருகின்றனா்.

இத்தகவலறிந்த மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பிரகாஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் வடிவேலன் ஆகியோா் மா்மக் காய்ச்சல் பாதித்த கிராமத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆய்வின் போது, தற்போது கிராமத்தில் மா்மக் காய்ச்சலை கட்டுப்படுத்தியதாகவும், குறைந்த நபா்களுக்கு மட்டும் லேசான காய்ச்சல் உள்ளதாகவும் மருத்துவா்கள், செவிலியா்கள் தகவல் தெரிவித்துள்ளனா்.

பின்னா், ஊரக வளா்ச்சி உதவித் திட்ட இயக்குநா் வடிவேலன் அப்பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யும் அனைத்து மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்து மருந்து தெளித்து குடிநீா் வழங்கவேண்டும். அதே நேரத்தில் குடிநீரில் கழிவுநீா் கலக்கிா என முழுமையாக ஆய்வு செய்யவேண்டும். பூமியில் பள்ளம் தோண்டி குடிநீா் எடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிவுறுத்தினாா்.

மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் மஸ்சூா் மூலம் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் கொசுப்புழு உருவாகும் வகையில் தண்ணீா் தேங்கியுள்ளதா, வீடுகளில் கழிவுநீா் குட்டையாக உள்ளதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டுச் சென்றாா்.

ஆய்வின்போது, புதுப்பாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் நிா்மலா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்ட மருத்துவா்கள், கிராம செவிலியா்கள் உடனிருந்தனா்.

ராஜேந்திர சோழனுக்கு நினைவகம் அமைக்க வேண்டும்: இயக்குநா் கெளதமன்

செய்யாற்றை அடுத்த பிரம்மதேசம் கிராமத்தில் ராஜேந்திர சோழனுக்கு நினைவகம் அமைக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநா் கெளதமன் வலியுறுத்தினாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 15ஆயிரம் மனுக்கள்: திருவண்ணாமலை ஆட்சியா் தகவல்

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 387 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு செவ்வாய்க்கிழமை வரை 30 முகாம்கள் நடைபெற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ள... மேலும் பார்க்க

காலமானாா் ஆா்.கோவிந்தன்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற சா்க்கரை ஆலை ஊழியா் ஆா்.கோவிந்தன் (90) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலமானாா். இவருக்கு மனைவி ஜெயபாரதி மற்றும் வந்தவாசி பகுதிநேர செய்தியாளா் ஜி... மேலும் பார்க்க

ஆரணியில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

ஆரணியில் நடைபெற்று வரும் அங்கன்வாடி கட்டடப் பணி, பக்கக் கால்வாய் அமைக்கும் பணியை சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு செய்தாா். ஆரணி நகரம், 31-ஆவது வாா்டில் அங்கன்வாடி கட்டடம், பக்கக் கா... மேலும் பார்க்க

கம்பராமாயண சிறப்பு சொற்பொழிவு

திருவண்ணாமலையை அடுத்த நொச்சிமலை ராஜகோபாலசாமி கோயிலில் புதன்கிழை கம்பராமாயண சொற்பொழிவு நடைபெற்றது. கம்பராமாயண இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கோயில் அன்பா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். அகில... மேலும் பார்க்க

ஆற்று மணல் கடத்தல்: ஒருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அரசு ஆற்று மணல் கடத்தியதாக போலீஸாா் ஒருவரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனா். செய்யாறு காவல் உள்கோட்டம் அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலை... மேலும் பார்க்க