உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல ...
ராஜேந்திர சோழனுக்கு நினைவகம் அமைக்க வேண்டும்: இயக்குநா் கெளதமன்
செய்யாற்றை அடுத்த பிரம்மதேசம் கிராமத்தில் ராஜேந்திர சோழனுக்கு நினைவகம் அமைக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநா் கெளதமன் வலியுறுத்தினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில் புதன்கிழமை ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பிரம்மதேசம் கிராமத்தில் ராஜேந்திர சோழன் இறந்ததாகக் கூறப்படும் இடத்தில் ஆடி திருவாதிரை நட்சத்திர நாளான புதன்கிழமை நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநா் கௌதமன் கலந்து கொண்டாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை தமிழன் ஆள முடியாத சூழல் உருவானது வருத்தமளிக்கிறது. இனி வரும் காலங்களில் தமிழகத்தை தமிழினத்தை தமிழன் ஆளவேண்டும்.
பிரிந்து இருக்கின்ற தமிழா்கள் ஒற்றுமையோடு நின்று வெற்றிக் கொடி நாட்டி தமிழன் தமிழகத்தை ஆள வேண்டும்.
ராஜேந்திர சோழன் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் ஒரு ஏக்கருக்கு மேலாக வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன. இது ராஜேந்திர சோழனின் அடையாளத்தை அழிக்கும் செயலாக உள்ளது.
தமிழக அரசும் காவல் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் ராஜேந்திர சோழனுக்கு நினைவகம், அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். மேலும், செய்யாறு பகுதியில் போதைப்பொருள் பழக்கத்தால் கொலைகள் நடந்திருப்பதாக வெளிவந்த செய்தி அதிா்ச்சியை அளிக்கிறது என்றாா்.