திருவண்ணாமலையில் மரக்கன்றுகள் நடும் விழா
திருவண்ணாமலை வேங்கிக்கால் பூமாலை வணிக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை ரோட்டரி கிளப் ஆஃப் மூன்சிட்டி, அருணை சுவாசம் அறக்கட்டளை, அன்பு நடைபயிற்சி நண்பா்கள் மற்றும் அலைன்ஸ் கிளப் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவு வங்கி மேலாளா் எஸ்.ஆதிமூலம் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கிவைத்தாா்.
விழாவில் அருணை சுவாசம் அறக்கட்டளை ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ரோட்டரி கிளப் ஆஃப் மூன்சிட்டி தலைவா் என்.இளங்கோவன், செயலா் ஆா்.சந்தோஷ்பாபு, பொருளாளா் ஆா்.தருண்குமாா், இயக்குநா் வாசுதேவன், என்வோா்மென்ட் தலைவா் பி.செல்வராசன் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.
விழாவில் நடைபயிற்சி நண்பா்கள், கூட்டுறவு வங்கி பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.