சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்ப...
கருப்பு மணல் கொண்ட அழகிய கடற்கரைகள்; சுற்றுலா பயணிகளை ஈர்ப்பது எதனால்?
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் செல்லக்கூடிய இடம் கடற்கரை. அதிலருக்கும் மணலில் அமர்ந்து கடல் அலைகளை ரசிப்பதே தனிசுகம். அங்கு இருக்கும் மணல்கள்தான் கடற்கரைக்கே அழகு சேர்க்கும் என்றே சொல்லலாம்.
கடற்கரைகளை நாம் அதிகம் பார்த்திருப்போம், ஆனால் கருப்பு நிற மணல்கள் கொண்ட கடற்கரையை பார்த்ததுண்டா? அப்படி உலகில் இருக்கும் கரு மணல் கொண்ட அழகிய கடற்கரைகள் குறித்து தான் பார்க்க போகிறோம்.
கருப்பு நிற மணல், எரிமலை தாதுக்கள் மற்றும் எரிமலை துண்டுகளால் உருவாகின்றன. அரிக்கப்பட்ட எரிமலைத் தாதுக்களில் இருந்து உருவாகும் இந்த கடற்கரை கருப்பு மணல் வழக்கத்திற்கு மாறாக இருப்பதால் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. அப்படி பார்வையாளர்களைக் கவரும் பிரபலமான கடற்கரைகள் இவைதான்!
ரெய்னிஸ்ஃப்ஜாரா கடற்கரை, ஐஸ்லாந்து
உலகின் மிகவும் பிரபலமான கருப்பு மணல் கடற்கரைகளில் ஒன்று தான் ஐஸ்லாந்தின் விக் அருகே உள்ள ரெய்னிஸ்ஃப்ஜாரா கடற்கரை. இங்கு இருக்கும் கருமணலைக் காண சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.

புனலு கடற்கரை அமெரிக்கா
ஹவாயின் பெரிய தீவில் அமைந்துள்ள புனலு கடற்கரை, ஒரு கண்கவர் கருப்பு மணல் கடற்கரையாகும். அங்கு செல்லும் பார்வையாளர்கள் கருப்பு மணலை மட்டுமல்லாது அழிந்து வரும் பச்சை கடல் ஆமைகள் குளித்துக் கொண்டிருப்பதையும் ரசித்துவிட்டு வருகிறார்கள்.
லோவினா கடற்கரை, பாலி
பாலியின் மற்ற வெள்ளை மணல் கடற்கரைகளைப் போலல்லாமல், லோவினா கடற்கரை அதன் கருப்பு மணல் மற்றும் அமைதியான சூழ்நிலைக்குப் பிரபலமானவை. சூரிய உதயத்தின்போது டால்பின்களைப் பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் இங்கு குவிக்கின்றனர்.

மிஹோ நோ மட்சுபாரா, ஜப்பான்
இந்த கருப்பு மணல் கடற்கரை ஃபுஜி மலையின் அற்புதமானக் காட்சிகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குகிறது. அடர் மணல், நீல நிற நீர் மற்றும் பனி மூடிய சிகரத்திற்கு இடையிலான இந்தக் கடற்கரை பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
பிளேயா நெக்ரா, கோஸ்டா ரிகா
கோஸ்டா ரிகாவில் உள்ள இந்த கருமணல் கொண்ட கடற்கரை அமைதியான சூழ்நிலைக்கு பெயர் பெற்றது. கரும் மணல் இந்த கடற்கரைக்கு ஒரு தனித்துவமான அழகை சேர்க்கிறது.
