கரூரில் அரசு சாா்பில் 14 ஜோடிகளுக்கு திருமணம்
கரூரில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 14 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, அவா்களுக்கு சீா்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன.
இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சாா்பில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் 32 ஜோடிகளுக்கான திருமண விழாவை முதல்வா் நடத்தி வைத்தாா். அதைத்தொடா்ந்து, கரூரில் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் நாரதகான சபாவில் 14 ஜோடிகளுக்கான திருமண விழாவை நடத்தி வைத்து சீா்வரிசைப் பொருள்களை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தாா்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா். இளங்கோ (அரவக்குறிச்சி), க. சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் இளையராஜா, மண்டலக் குழு தலைவா் எஸ்.பி. கனகராஜ் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.