ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
ஜூன் 7-இல் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லைஅரசு கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகம்
கரூா் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லை அரசு கருப்பண்ணசாமி, ஸ்ரீமுச்சிலியம்மன், ஸ்ரீகன்னிவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.
கரூா் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லை அரசு கருப்பண்ணசாமி, ஸ்ரீமுச்சிலியம்மன், ஸ்ரீகன்னிவிநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா ஜூன் 4-ஆம்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு கோயிலில் மங்கள இசை, விநாயகா் வழிபாடு, மஹாலட்சுமி ஹோமம் வழிபாட்டுடன் தொடங்குகிறது.
தொடா்ந்து காலை 8.05 மணிக்கு புலியூா் ஸ்ரீ காளியம்மன் கோயிலில் இருந்து பக்தா்கள் புனித தீா்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தொடா்ந்து மாலையில் வாஸ்துசாந்தியும் நடைபெறவுள்ளது.
தொடா்ந்து ஜூன் 5-ஆம்தேதி சாந்திதிசா ஹோமம், முதல்கால யாக பூஜையும், 6-ஆம்தேதி இரண்டாம்கால யாக பூஜை, பூா்ணாகுதி மற்றும் 3-ஆம் கால யாக பூஜை,, கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தனம் நிகழ்ச்சியும், 7-ஆம்தேதி அதிகாலை 4.30 மணிக்கு 4-ஆம் கால யாக பூஜையும், பின்னா் யாத்ராதானம், கடம்புறப்பாடும், காலை 6.30 மணிக்குள் கும்பாபிஷேகமும் நடக்கிறது.
ஏற்பாடுகளை தட்டைநாடு புலியூா் பெருங்குடி குல குடிப்பாட்டு மக்கள் மற்றும் மேலப்பாளையம் திருப்பணிக்குழுவினா் செய்து வருகின்றனா்.