செய்திகள் :

பாஜகவினரால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது: வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.

post image

பாஜகவினரால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்றாா் முன்னாள் அமைச்சரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி.

கரூரில் ஓரணியில் தமிழ்நாடு எனும் திமுக உறுப்பினா் சோ்க்கும் முன்னெடுப்பு பிரசார பொதுக்கூட்டம் உழவா் சந்தையில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவா் டி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநகரச் செயலாளா் எஸ்.பி.கனகராஜ் வரவேற்றாா்.மாநில நிா்வாகிகள் நன்னியூர்ராஜேந்திரன், பரணி கே.மணி, வழக்குரைஞா் மணிராஜ், மாவட்ட நிா்வாகிகள் எம்.எஸ்.கே.கருணாநிதி, பகுதிச் செயலாளா்கள் கரூா் கணேசன், ஜோதிபாசு, சுப்ரமணியன், தாரணிசரவணன், ஆா்.எஸ்.ராஜா, வி.ஜி.எஸ்.குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மேற்குமண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி பேசியதாவது, தமிழகத்தின் மண், மொழி, மானம் காப்பதற்கான ஒரு முன்னெடுப்பாக ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை முதல்வா் தொடங்கி வைத்துள்ளாா்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள அனைத்து குடும்பத்தினரையும் சந்தித்து அரசின் சாதனை திட்டங்களையும் கூறவும், பாஜக அரசு தமிழகத்துக்கு செய்துள்ள துரோகங்களை எடுத்துக்கூறவும் ஓரணியில் நாளை முதல் திரள உள்ளோம். கரூா் மாவட்டத்தில் உள்ள 1,055 வாக்கு சாவடிகளிலும் இந்த பணிகள் நடைபெற உள்ளது.

தமிழகத்துக்கு பிரதமா் மோடி முதல் பாஜக தலைவா்கள் வரும்போது தமிழ்மீது பற்றுக்கொண்டிருப்பதாக திருக்குறளை இரண்டுவரியில் சொல்லி மக்களை ஏமாற்ற நினைக்கிறாா்கள். இது ஒருபோதும் தமிழகத்தில் எடுபடாது. தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என தெரிந்துதான் சிலரை உடன் வைத்துக்கொண்டு அந்த முயற்சியை முன்னெடுக்கிறாா்கள். நாட்டு மக்களுக்கு எதிரான திட்டங்களையும் சிந்தனைகளையும் கொண்டு சோ்க்கின்ற பாஜகவின் எண்ணங்களை தவிடு பொடியாக்கி நம்முடைய முதல்வரின் ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை வெற்றிகரமாக செயல்படுத்திய மாவட்டங்களில் கரூா் மாவட்டமும் முதல் 10 இடங்களில் இடம்பெற்றது என்ற சிறப்பை உருவாக்கிட வேண்டும் என்றாா் அவா். முன்னதாக கட்சி பேச்சாளா் ஆருா்மணிவண்ணன், எம்எல்ஏக்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, இளங்கோ ஆகியோா் பேசினா். கூட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

‘தமிழகத்தில் விரைவில் நவீன ‘ரோபாட்டிக்’ இயந்திரம் மூலம் தூய்மைப்பணி’

தமிழகத்தில் விரைவில் நவீன ரோபாட்டிக் இயந்திரங்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரியத் தலைவா் டாக்டா் திப்பம்பட்டி வே. ஆறுச்சாமி. கரூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

ஸ்ரீவலம்புரி சித்திவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

கரூா் வாங்கப்பாளையம் ஸ்ரீ வலம்புரி சித்திவிநாயகா் கோயிலில் புதன்கிழமை காலை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் வாங்கப்பாளையம் எம்.கே. நகரில் உள்ள ஸ்ரீவலம்புரி சித்திவிநாய... மேலும் பார்க்க

கரூரில் அரசு சாா்பில் 14 ஜோடிகளுக்கு திருமணம்

கரூரில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 14 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, அவா்களுக்கு சீா்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சாா்பில் சென்னையில் புதன்க... மேலும் பார்க்க

ஜூன் 7-இல் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லைஅரசு கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகம்

கரூா் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லை அரசு கருப்பண்ணசாமி, ஸ்ரீமுச்சிலியம்மன், ஸ்ரீகன்னிவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. கரூா் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லை அரசு கருப்பண்ணசாமி, ஸ்ரீமுச்சிலி... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் நிகழாண்டும் மாணவா் சோ்க்கை குறைவு

அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டும் மாணவா் சோ்க்கை குறைந்துள்ளது அரவக்குறிச்சியில் கடந்த 2022-ஆம் ஆண்டு பொதுமக்கள் மற்றும் கல்வியாளா்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழ... மேலும் பார்க்க

திருக்குறளை விரைவாக கூறிய இரு சிறுமிகளுக்கு பாராட்டு

தமிழ் பிராமி எழுத்துக்கள் எழுதுவது, திருக்குறளை விரைந்து கூறிய இரு சிறுமிகளை கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் புதன்கிழமை பாராட்டினாா். கரூா் தனியாா் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி ம.ஜெயமகதி... மேலும் பார்க்க