விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்
திருக்குறளை விரைவாக கூறிய இரு சிறுமிகளுக்கு பாராட்டு
தமிழ் பிராமி எழுத்துக்கள் எழுதுவது, திருக்குறளை விரைந்து கூறிய இரு சிறுமிகளை கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் புதன்கிழமை பாராட்டினாா்.
கரூா் தனியாா் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி ம.ஜெயமகதி(6), மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி ம.மித்திலா(8). இதில் மாணவி ம.ஜெயமகதி ஒரு நிமிஷம் 35 விநாடிகளில் திருக்குறளில் உள்ள உதடுகள் ஒட்டாத 25 திருக்குறளை கூறுகிறாா். இதேபோல மாணவி ம.மித்திலா தமிழ் எழுத்துகளின் தொன்மை எழுத்தான பிராமி தமிழி எழுத்துக்கள் 52 எழுத்துக்களை ஒரு நிமிஷம் 35 விநாடிகளில் எழுதுகிறாா். சகோதரிகளான இரு சிறுமிகளின் திறனை அறிந்த மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் புதன்கிழமை அலுவலகத்திற்கு வரவழைத்து பரிசுகள் வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியின்போது மாணவிகளின் பெற்றோா் உடனிருந்தனா்.