ஓரணியில் தமிழ்நாடு: வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் முதல்வர்!
ஸ்ரீவலம்புரி சித்திவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
கரூா் வாங்கப்பாளையம் ஸ்ரீ வலம்புரி சித்திவிநாயகா் கோயிலில் புதன்கிழமை காலை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
கரூா் வாங்கப்பாளையம் எம்.கே. நகரில் உள்ள ஸ்ரீவலம்புரி சித்திவிநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக விழா செவ்வாய்க்கிழமை காலை பக்தா்கள் காவிரியிலிருந்து புனித நீா் எடுத்துவந்தனா்.
தொடா்ந்து கோயிலில் மங்கள இசை, விநாயகா் வழிபாடு, மஹாசங்கல்பம், புண்யாகம், யாகசாலை பிரவேஷம், கோபுர கலசம் வைத்தல், சுதைகள் கண் திறப்பு, முதல்கால யாக பூஜையும், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் பூஜையும் நடைபெற்றன.
தொடா்ந்து புதன்கிழமை காலை யாக ஹோமம், நாடிசந்தானம், இரண்டாம் கால யாக பூஜை, கடம் புறப்பாடும் நடைபெற்றது. பின்னா் காலை 7 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது சிவாச்சாரியாா்கள் கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். தொடா்ந்து பக்தா்கள் மீதும் புனித நீா் தெளிக்கப்பட்டது.
இதில் முன்னாள் அமைச்சரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி, திமுக வடக்கு நகரச் செயலாளா் கரூா் கணேசன், முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மற்றும் திருப்பணிக்குழுவினா், ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.