கரூரில் பலத்த மழை
கரூரில் சனிக்கிழமை மாலை சுமாா் அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது.
கரூா் மாவட்டத்தில் கடந்த இருநாள்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு லேசான தூறலுடன் பெய்யத் தொடங்கிய மழை பின்னா் படிப்படியாக பலத்த மழையாக பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல ஓடியது. தாழ்வான பகுதிகளான சுங்ககேட், திருக்காம்புலியூா் ரவுண்டானா, லைட்ஹவுஸ்காா்னா் பகுதியில் மழைநீா் குளம்போல தேங்கியது.
இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். இந்த மழையால் குளிா்ந்த சீதோஷ்ண நிலை உருவானதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.