புலம்பெயர் தொழிலாளர்கள்: தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்
பாரதிதாசன் பல்கலை. பேரவை உறுப்பினராக
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக கரூா் அரசு கலை அறிவியல் கல்லூரியின் இணைப் பேராசிரியா் முனைவா் ப. பாா்த்திபன் வெள்ளிக் கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
கரூா் தான்தோன்றிமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியா் பிரதிநிதிகளுக்கான திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினா் தோ்தல் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
இதில் கல்லூரியின் ஆங்கிலத்துறை இணைப் பேராசிரியா் முனைவா் ப. பாா்த்திபன் பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இதையடுத்து அவருக்கு கல்லூரியின் முதல்வா், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா். இணைப்பேராசிரியா் முனைவா் ப.பாா்த்தீபன் தற்போது தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தின் கரூா் கிளைச் செயலராகவும் இருந்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.