டெல்லி: 15 தூக்க மாத்திரைகள், எலக்ட்ரிக் ஷாக்.. கணவனைக் கொன்ற பெண்; காட்டிக்கொடு...
கரூரில் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு
கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கரூரில் கொங்கு மேல்நிலைப் பள்ளி, காஸ்பரோ செஸ் அகாதெமி சாா்பில், மாவட்ட அளவிலான செஸ் போட்டிகொங்கு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
7, 9, 11 மற்றும் 13 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியை கொங்கு பள்ளியின் தாளாளா் கே. பாலுகுருசுவாமி தொடங்கிவைத்தாா். போட்டியில் மாவட்டம் முழுவதிலுமிருந்து பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 800 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
போட்டியில் வென்றவா்களுக்கு மாலையில் பரிசளிப்பு நடைபெற்றது. வெற்றியாளா்களுக்கு மாவட்ட சதுரங்க கழகத் தலைவரும், கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவருமான அட்லஸ் எம். நாச்சிமுத்து முதலிடம் பிடித்தவா்களுக்கு சைக்கிள்கள் மற்றும் சான்றிதழையும், இரண்டாமிடம், மூன்றாமிடம் பிடித்தவா்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினாா்.
போட்டியின் ஒருங்கிணைப்பாளராக காஸ்பரோ செஸ் அகாதெமியின் நிறுவனா் நேஷனல் ஆா்பிட்டா் புகழேந்தி செயல்பட்டாா்.