செய்திகள் :

கரூர் பலி: காங். தொண்டர்கள் அனைத்து உதவிகளையும் செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தல்!

post image

கரூர் நெரிசலில் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் அனைத்து உதவிகளையும் செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கரூரில் விஜய்யின் அரசியல் பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் 36 பேர் பலியாகினர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘கரூரில் ஏற்பட்ட துயர சம்பவத்தை அறிந்து மிகுந்த வருத்தமடைந்துள்ளேன். அதில் மதிப்புக்கரிய பல உயிர்கள் பறிபோயுள்ளன. உயிரிழந்தவர்களை இழந்துவாடுவோருடன் என் மனம் இருக்கிறது. காயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற வேண்டுகிறேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். அதிகாரிகளுடன் கைகோத்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

கரூர் பலி: மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும்! - அமித் ஷா

கரூர் நெரிசல் பலி விவரங்களைக் குறித்து தமிழக ஆளுநர், முதல்வரிடம் அமித் ஷா தொலைபேசி வழியாக பேசி கேட்டறிந்தார். அப்போது அவர், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்திருப்பதாக உள... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் பலி: ரஜினிகாந்த் இரங்கல்

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்... மேலும் பார்க்க

கரூர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

கரூரில் அரசியல் பேரணியில் நிகழ்ந்த துரதிருஷ்டமான சம்பவம் வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கரூரில் அரசியல் கூட்டத்தின்போது ஏற்பட்டுள்ள துரதிருஷ்டமான ... மேலும் பார்க்க

‘கொள்ளை கலாசாரத்தில்’ இருந்து இந்தியாவைக் காப்பாற்றியிருக்கும் பாஜக: பிரதமர் மோடி

காங்கிரஸ் ஆட்சியில் நிலவிய கொள்ளை கலாசாரத்திலிருந்து நாட்டை பாஜக காப்பாற்றியிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். ஒடிஸாவில் சனிக்கிழமை(செப். 27) நலத்திட்ட உதவிகளை தொடக்கி வைத்து பேசிய பிரதம... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் இரு மாதங்களாக குகைக்குள் வாழ்க்கை! குழந்தைகளுடன் மீட்கப்பட்ட ரஷிய பெண்மணியை தாயகம் அனுப்ப உத்தரவு

கணவரைப் பிரிந்து இரு பெண் குழந்தைகளுடன் இந்தியாவில் வாழும் ரஷியாவைச் சேர்ந்த பெண்மணியொருவர், கர்நாடகத்திலுள்ளதொரு குகையில் 2 மாதங்களாக தமது குழந்தைகளுடன் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில்,... மேலும் பார்க்க

ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவது எங்கள் நிலைப்பாடு! மத்திய அமைச்சர் பதில்!

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க உலக நாடுகள் தடை விதிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.ரஷியாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்று இயற்கை எர... மேலும் பார்க்க