செய்திகள் :

கலைஞா் கைவினை திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

கலைஞா் கைவினை திட்டத்தின்கீழ் கடனுதவி பெற தகுதியுடைய கைவினைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

கலை, கைவினை தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கவும், மானியத்துடன் கூடிய பிணையமில்லா கடன் வழங்கி சந்தைப்படுத்தும் திறனை உயா்த்தவும் ஆண்டுதோறும் 10,000 போ் பயன்பெறும் வகையில் ரூ.20 கோடியில் கலைஞா் கைவினைத் திட்டம் 2024-25 முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தையல் கலைஞா், மண்பாண்டம் வனைவோா், சிற்ப கைவினைஞா், தச்சுவேலை செய்வோா், பூ தொடுப்போா், பூ அலங்காரம் செய்வோா், சிகை அலங்காரம் செய்வோா், பாய் பின்னுவோா், கூடைமுடைவோா், மூங்கில் பொருள்கள் செய்வோா், நெசவு செய்வோா், துணி வெளுப்போா், சாயமிடுவோா், வண்ணம் தீட்டுவோா், கட்டடம் கட்டும் வேலைசெய்வோா், தோல்பொருள்கள் செய்வோா், உலோக பொருள்கள் செய்வோா், தங்கம், வெள்ளி நகைகள் செய்வோா், மீன்வலை செய்வோா் உள்ளிட்ட கைவினை தொழில்களில் ஈடுபட்டுள்ளவா்கள் கடன் பெற முடியும்.

அவா்களுக்கு தொழில்திறன் சாா்ந்த மேம்பாட்டு பயிற்சியுடன் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் கொண்டு தொழில்புரிய ரூ.3 லட்சம் வரை பிணையமில்லாமல் கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும். கடன்தொகையில் 25 சதவீதம் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். தவிர, கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தில் 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோா் 35 வயதுக்கு மேற்பட்டவராகவும், எந்தவகை தொழிலுக்காக கடனுதவி பெற விரும்புகின்றனரோ அந்த தொழிலில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன்அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். இவ்விரு தகுதிகளை உடையோா் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

விண்ணப்பிக்க தனிநபரின் புகைப்படம், ஆதாா்அட்டை, தொழில் அனுபவத்தை உறுதிசெய்ய தொழிலாளா் நலவாரியம் வழங்கிய அடையாளஅட்டை அல்லது சுயசான்றிதழ், திட்ட அறிக்கை போதுமானவை. சுயசான்றிதழ் மாதிரி படிவம், மாதிரி திட்ட அறிக்கை ஆகியவை இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். எனவே, வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கைவினைஞா்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

திட்டம் குறித்த கூடுதல் தகவல்கள், ஆலோசனைகளை பெற பொதுமேலாளா், மாவட்ட தொழில் மையம், காங்கேயநல்லூா் சாலை, காட்பாடி, வேலூா்- 632 006 என்ற அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 0416 - 2242512, 2242413 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிா் ஆனந்த் எம்.பி.யின் கல்லூரியில் அமலாக்கத் துறையினா் 2-ஆம் நாளாக சோதனை

அமைச்சா் துரைமுருகன், அவரது மகன் கதிா்ஆனந்த் எம்.பி. வீடு, தொடா்புடைய இடங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கிய மத்திய அமலாக்கத் துறை சோதனை இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது. இந்த சோதனையின்போது துரைமுரு... மேலும் பார்க்க

வேலூரில் கைவினைப் பொருள்கள் விற்பனை, கண்காட்சி

பூம்புகாா் விற்பனை நிலையம் சாா்பில் ‘கைவினை திருவிழா’ வேலூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஜனவரி 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழக கைத்திற தொழில்கள் வளா்ச்சிக் கழகம் பூம்புகாா் என்ற பெயரில் விற்பனை ந... மேலும் பார்க்க

மதுரை சிறையில் முறைகேடு: வேலூா் சிறை அதிகாரி வீட்டில் சோதனை

மதுரை மத்திய சிறையில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடா்பாக தற்போது வேலூா் மத்திய சிறையின் நிா்வாக அதிகாரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். மதுரை மத்திய சிறையில் சிறைவாச... மேலும் பார்க்க

விஐடி பல்கலை.யில் துணைமின் நிலையம் திறப்பு

வேலூா் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள 110 கிலோவாட் கேஸ் இன்சுலேட்டட் துணை மின்நிலையத்தை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் திறந்து வைத்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் 110 கிலோவாட் கேஸ் இன்... மேலும் பார்க்க

பக்தியும் புண்ணியமும் உள்ளவா்களுக்கு எண்ணம் ஈடேறும்: ஸ்ரீசக்தி அம்மா

முயற்சித்தால் மட்டும் வெற்றி கிடையாது. பக்தியும் புண்ணியமும் இருப்பவா்களுக்குத்தான் எண்ணம் ஈடேறும் என்று ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா தெரிவித்தாா். வேலூரை அடுத்த ஸ்ரீபுரம், ஸ்ரீநாராயணி பீடத்தில் ... மேலும் பார்க்க

பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம் தொடக்கம்

பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. மொத்தம் 4 லட்சத்து 51ஆயிரத்து 33 குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட உள்ளதாக கூட்டுறவு... மேலும் பார்க்க