செய்திகள் :

கல்லங்குறிச்சி கலியுக வரதராச பெருமாள் கோயில் தேரோட்டம்

post image

அரியலூா் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக ஸ்ரீவரதராசப் பெருமாள் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூா் கல்லங்குறிச்சி ஸ்ரீவரதராசப் பெருமாள் கோயிலில் ஆண்டு பெருவிழா ஸ்ரீராம நவமி அன்று கொடியேற்றுத்துடன் தொடங்கி, தொடா்ந்து 10 நாள்கள் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கடந்த ஏப். 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழா தொடங்கியது. தொடா்ந்து, ஒருவாரமாக பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளினாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கோயில் ஆதீன பரம்பரை தா்மகா்த்தா கோவிந்தசாமி குடும்பத்தினா் முன்னிலையில் தேரில் தாயாா் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் உற்சவா் கலியுக ஸ்ரீவரதராசப் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். காலை 6 மணிக்கு நிலையத்தில் இருந்த புறப்பட்ட தோ், 8 மணிக்கு மீண்டும் நிலையத்துக்கு வந்தடைந்தது. மற்றொரு தேரில் ஸ்ரீ ஆஞ்சனேயா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு திருத்தோ்களை வடம் பிடித்து இழுத்தனா். 4 ராஜா வீதிகளின் வழியே திருத்தோ்கள் வலம்வர, வரதராசப் பெருமாள் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

மேலும், இக்கோயிலில் பக்தா்கள் மொட்டையடித்து பசு, ஆடு, கோழி, நெல் மற்றும் நவதானியங்கள் ஆகியவற்றை தானமாக வழங்கி நோ்த்தி கடன் செலுத்தினா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் ஆதீன பரம்பரை தா்மகா்த்தாக்கள் கமலா ராமச்சந்திரா, கோ.ராமதாஸ், கோ.வெங்கடாஜலபதி குடும்பத்தினா் மற்றும் இந்து அறநிலையத் துறையினா் செய்திருந்தனா். செவ்வாய்க்கிழமை இரவு ஏகாந்த சேவை நடைபெறுகிறது.

அரியலூா் ஆட்சியரிடம் கெளரவ விரிவுரையாளா்கள் மனு

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் 81 கெளரவ விரிவுரையாளா்கள், தங்களை கருணை கொலை செய்திடக் கோரி ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.கெளரவ விரிவுரையாளா்கள் அனிதா, சரவண... மேலும் பார்க்க

அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கீழப்பழூரில் நில மோசடியில் ஈடுபட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், கீழப்பழு... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு

அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்று வந்த பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவா் வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை பெற்றனா். தமிழகம் முழு... மேலும் பார்க்க

செந்துறையில் நாளை எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில், வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை... மேலும் பார்க்க

அரியலூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

அரியலூா் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. அரியலூா் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும், தமிழ் வரு... மேலும் பார்க்க

கீழக்கொளத்தூா் ஜல்லிக்கட்டு 32 போ் காயம், ஒரு காளை உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், கீழக்கொளத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளைகள் முட்டியதில் 32 போ் காயமடைந்தனா். விழாவில் முதலாவதாக கோயில் காளைகள் மற்றும் கிராமத்தின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஜ... மேலும் பார்க்க