வளையல் விற்பனை முதல் மதம் மாற்றம் செய்தது வரை... கிராமத் தலைவரின் வங்கிக் கணக்கி...
கல்லூரி மாணவி தற்கொலை
ஒட்டன்சத்திரம் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த காப்பிலியபட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகள் ஆனந்த ஜோதி (19). இவா் ஒட்டன்சத்திரத்தில் உள்ள அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.
இவா் ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த அவரது தாய் லட்சுமி அவரைக் கண்டித்தாராம்.
இதனால், மனமுடைந்த ஆனந்த ஜோதி திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].